அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இன்று முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில் கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 597 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் உரிய பரிசீலனைக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.