அரியலூர்: மின் கோபுர விளக்குகள் திருட்டு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலால் அரசு பள்ளியில் 38 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறைகளுக்காக கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்டிடம் கட்டுவதற்கு இடையூறாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு பள்ளி காம்பவுண்ட் சுவரை ஒட்டி மூன்று லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட உயர்மட்ட மின்கோபுர விளக்கை மாற்று இடத்தில் வைக்காமல் அதனை அடியோடு சாய்த்து விட்டனர். அதிலிருந்த ஒரு சில மின்விளக்குகள் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 

சில விளக்குகள் அந்த இடத்திலேயே நொறுங்கி விட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அரசு பணத்தை வீணடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த உயர்மட்ட மின்கோபுர விளக்கை மாற்று இடத்தில் வைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி