ஆண்டிமடம் வாகனங்கள் மோதி விபத்து

இன்று சனிக்கிழமை (21. 2. 2026) காலை ஆண்டிமடத்தில் இருந்து தென்னூர் நோக்கி பால் கொள்முதல் செய்ய சென்ற தனியார் டாடா ஏசி வாகனம், சூரப்பள்ளம் என்ற இடத்தில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் பலத்த காயம் அடைந்தார். அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆண்டிமடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி