அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் உண்மை குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று (டிசம்பர் 30) தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அரசு கொறடா தாமரை, ராஜேந்திரன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.