அரியலூர்: 2 பெண்களை துப்பாக்கியால் சுட்டவருக்கு ஆயுள் தண்டனை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் கடந்த 22.10.2022 அன்று காலையில் பன்றி வேட்டைக்குத் தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு பெரியவளையம் கிராம முந்திரி காட்டுப் பகுதிக்குச் சென்றார். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மலர்விழி மற்றும் கண்ணகி ஆகியோர் காளான் பறித்துக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொலை செய்தார். 

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது. வழக்கைவிசாரித்த நீதிபதி மலர் வாலண்டினா, குற்றவாளி பால்ராஜ்க்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் குற்றவாளி 45 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி