ஜெயங்கொண்டம்: டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சாலை மறியல்

ஜெயங்கொண்டம் அருகே குடியிருப்புப் பகுதிகளில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி பெண்கள் இரண்டு வருடங்களாகப் போராடி வருகின்றனர். கடந்த வாரம் 206-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அரசு விதிமுறைகளை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பதாகவும், தட்டிக் கேட்போரை மிரட்டுவதாகவும் கூறி பெண்கள், இளைஞர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஜெயங்கொண்டம் - விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

தொடர்புடைய செய்தி