அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியின் மகனும், உறைவால் விளையாட்டு வீரருமான கார்த்திக், ஜூன் 1ஆம் தேதி காஷ்மீரில் நடைபெறவிருக்கும் தேசிய உறைவால் போட்டியில் பங்கேற்க நிதி உதவி கோரி சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கத்திடம் மனு அளித்தார். மனுவைப் பரிசீலித்த எம்எல்ஏ, கார்த்திக் காஷ்மீர் சென்று வருவதற்குத் தேவையான நிதியுதவியை வழங்கினார். நிதி உதவி பெற்ற கார்த்திக் காஷ்மீரில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.