அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பொ. இரத்தினசாமி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.05.2026 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகளின் புகார்களுக்கு துறை அலுவலர்கள் பதிலளித்தனர். மழை அளவு, விதை மற்றும் உரம் இருப்பு விவரங்கள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், ஆதார் இணைந்த வேளாண் அடுக்கு திட்டம் மூலம் விவசாய அடையாள எண் பெற்று மானியங்கள் மற்றும் கடன்கள் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி