அரியலூர்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் வாயிலாக மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகையும், மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 மேலும் மாணவர்கள் தினந்தோறும் செய்திதாள்கள், நடப்பு நிகழ்வுகள், பள்ளிப் பாடப்புத்தகங்கள், நூலகத்திற்கு சென்று புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தங்களது வாசிப்பு திறனை அதிகரித்துக்கொண்டால் போட்டித்தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள முடியும். மாணவர்கள் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு மூலம் உயர்பதவிகளை பெறலாம்.
மேலும் மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி குறித்த சந்தேகங்களுக்கு தீர்வு அளிக்கும் வகையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இரண்டாவது தளம், அறை எண். 201-ல் உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை சேவை துவங்கப்பட்டுள்ளது. 

இக்கட்டுப்பாட்டு அறை சேவை மையத்தினை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் வருகை புரிந்தோ அல்லது 84388 50550 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்று பயன்பெறலாம் எனவும், 12-ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பயின்று வாழ்கையில் முன்னேற்றம் பெறவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி, தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி