அரியலூர் ரயில்வே கேட்டு அருகே இன்று காலை வாலிபர் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் அல்லி நகரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஹரிஹரன் என தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டதற்கான சிகிச்சை பெற்று வந்ததும் விசாரணையில் வெளிவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.