கோவை மாவட்டம் சூலூர் அருகே தாயை தரக்குறைவாகப் பேசிய நண்பரை நேற்று (மே 19) வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரைச் சேர்ந்த சரவணன் (29), நண்பர்களான கோகுல் மற்றும் ஹரிஷுடன் மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டது. அப்போது கோகுலின் தாயைப் பற்றி அவதூறாகப் பேசியதால் ஆத்திரமடைந்த இருவரும் சரவணனை கத்தியால் தாக்கி கொலை செய்தனர். கோகுல் நீலாம்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தலைமறைவான ஹரிஷை போலீசார் தேடி வருகின்றனர்.