அரியலூர்: கொலை முயற்சி.. கைதானவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

அரியலூர் மாவட்டம் கரைவெட்டியைச் சேர்ந்த வேல்முருகன் (37) மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. கடந்த 21.01.2026 அன்று டாஸ்மாக் கடையில் பணம் கேட்டு தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக திருமானூர் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சமூக அமைதிக்கு ஆபத்தானவர் என கருதி 21.02.2026 அன்று மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

தொடர்புடைய செய்தி