அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில், பலத்த சத்தத்துடன் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி பரபரப்பை ஏற்படுத்தியது. வளைவில் திரும்பும்போது லாரி விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. சிலிண்டர்கள் வெடித்ததால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், சாலை மூடப்பட்டு வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. ஓட்டுநரின் நிலை குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.