அரியலூர்: கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு diana.kurien@automicmail.io என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. 21 சயனைடு மற்றும் 2 மனித வெடிகுண்டுகள் மூலம் மதியம் 12.50 மணிக்கு வெடிக்க இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின் பேரில், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பதும், இது வெறும் மிரட்டல் என்பதும் தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி