அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காரில் வந்து ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட தனிப்படை, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேரை நேற்று (28.05.2026) கைது செய்தது. அவர்களிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்கள் மற்றும் 27 ஆடுகள் மீட்கப்பட்டன.