அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீசார் பாப்பாக்குடி மேம்பாலத்தின் கீழே தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்துகொண்டிருந்த 4 வாலிபர்களைக் கண்டனர். அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கைது செய்து அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.