ஆண்டிமடம்: மாரியம்மனுக்கு.. மங்கள இசையுடன் ஊஞ்சல் தாலாட்டு

ஆண்டிமடம் அடுத்து குவாகம் கிராமத்தில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை தோளீஸ்வரர் மற்றும் பரிவார தேவதைகளுக்கும், அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வரதராஜபெருமாள் பல்லக்கு வீதி உலா நடைபெற்றது. இதில் முன்னதாகவே சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளை பல்லக்கில் ஏற்றி முக்கிய வீதி வழியாக சாமி வீதியுலா நடைபெற்றது. 

மங்கள இசையுடன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வந்த சுவாமிகளை திரளான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 7.30 மணிக்கு மாரியம்மனுக்கு மங்கள இசையுடன் ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை ஊஞ்சல் தாலாட்டி மாரியம்மனை வணங்கி சென்றனர்.

தொடர்புடைய செய்தி