வத்தலகுண்டு பகுதியிலிருந்து சென்னைக்கு வாழை இலை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு வேன், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை மேம்பாலத்தில் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து, பின்னால் வந்த மற்றொரு வாழை இலை வேனும், கேரளாவிலிருந்து சென்னை சென்ற தனியாா் பேருந்தும் வேன்கள் மீது மோதின. இந்த தொடர் விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். பெரம்பலூா் போலீஸாா் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.