அரியலூரில் 6 புதிய மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவைகளை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் தொடங்கி வைத்தார். கோடை மழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் மின் கட்டமைப்புகள் தயார் நிலையில் இருப்பதாகவும், தேவையான உபகரணங்கள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். மகளிர் விடியல் பயண திட்டம் இந்தியாவில் முன்மாதிரி எனவும், ஒரு பெண்களுக்கு மாதம் ரூ.888 சேமிப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.