மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜூலை 31) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மின்தடை ஏற்படவுள்ளது. அதேபோல் சென்னையில் வேளச்சேரி, அடையாறு, பல்லாவரம், வியாசர்பாடி, ஆவடி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படவுள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.