தமிழ்நாட்டில் இன்று (பிப்.25) மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை முழு நேர மின்தடை செய்யப்படவுள்ளதாக தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தேனி, கோவை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், திண்டுக்கல், விருதுநகர், ஈரோடு, கரூர், மதுரை, திருப்பத்தூர், நாகை, தர்மபுரி, விழுப்புரம், திருச்சி, திருப்பூர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒருசில பகுதிகளில் மட்டும் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளது.