மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.17) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி உடுமலைப்பேட்டை, பல்லடம், கோவை மெட்ரோ, கோவை தெற்கு, ஈரோடு, மதுரை, பெரம்பலூர், சேலம் ஆகிய மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை இந்த மின்தடை இருக்கும் என தெரிவிக்கப்படுள்ளது.