மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்.4) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, கோயம்புத்தூர், உடுமலைப்பேட்டை, பெரம்பலூர், திருச்சி, திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல் மயிலாடுதுறை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒருசில பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை இந்த மின்தடையானது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.