உணவு உண்ட பின் குளிப்பது உடல் நலத்திற்கு பல்வேறு தீங்குகளை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உணவு செரிமானமாவதற்கு தேவையான உடல் வெப்பம், குளிக்கும்போது குறைய தொடங்கும்; இதனால் செரிமானம் தாமதமாவதுடன் வயிற்றில் தேவையற்ற உபாதைகளும் ஏற்படும். நாளடைவில் இது பசியின்மையையும் ஏற்படுத்தும் என்பதால், எப்போதும் குளித்த பின்பே உண்பது சிறந்தது.