சூடான உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கிறீர்களா? எச்சரிக்கும் மருத்துவர்கள்

சமைத்த சூடான உணவுகளை நேரடியாக ஃபிரிட்ஜில் வைப்பது உணவின் தன்மையைப் பாதிப்பதுடன் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். சூடான பாத்திரங்களை வைக்கும் போது ஃபிரிட்ஜின் உட்புற வெப்பநிலை உயர்ந்து, அதில் ஏற்கனவே உள்ள பிற உணவுகளில் பாக்டீரியாக்கள் வேகமாகப் பெருகி உணவு நச்சாக மாற வாய்ப்புள்ளது. எனவே, சமைத்த உணவை அறை வெப்பநிலைக்குக் குளிர வைத்த பிறகே மூடி வைத்து ஃபிரிட்ஜில் சேமிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕