தவெக அரசை, திமுக உடன் ஒப்பிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, “தமிழகத்தின் முக்கியப் பகுதிகளில் தொடர் மின்வெட்டு காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த முறை தமிழகத்தை தவிக்க வைத்த திமுக அரசுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தவெக அரசும் மக்களை வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் கிடைக்க முதலமைச்சர் விஜய் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.