பாஜகவை பார்த்து பயப்படுகிறதா தவெக?

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்-க்கு ஒதுக்குவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். தமிழக அரசியலில் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள தவெக, தேசிய அரசியலில் நுழையும் வாய்ப்பை அக்கட்சியே உதறித் தள்ளிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் சாடியுள்ளனர். தேசிய அளவில் பாஜக கொண்டு வரும் மசோதாக்களை, நன்மை தீமை அறிந்து எதிர்க்க தவெக தயங்குவதாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இந்தியா கூட்டணியில் திமுகவும், தவெகவும் ஒன்றாக இருப்பார்களா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி