பிஎஸ்எல்வி-சி 61: விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம்

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி 61 ராக்கெட் வரும் மே 18ஆம் தேதி காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. முன்னதாக, 6.59 மணிக்கு ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த ராக்கெட் மூலம் 1,710 கிலோ எடை கொண்ட இஓஎஸ்-09 (ரிசாட்-1பி) என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதன் மூலம் பூமியின் மேற்பரப்பில் துல்லியமாக படம் பிடித்து, உளவு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி