எத்தனையோ பண்டிகைகள் இருந்தாலும் பொங்கல் பண்டிகைக்கு ஈடாகுமா? குடும்பங்கள் இணைந்து பொங்கல் வைத்து அறுவடை திருநாளை கொண்டாடுவார்கள். சர்க்கரை பொங்கல், கல்கண்டு பொங்கல், வெண்பொங்கல், சிறுதானிய பொங்கல், கருப்பட்டி பொங்கல், கரும்பு சாறு பொங்கல், பால் பொங்கல் என பொங்கலில் பல்வேறு வகைகள் உள்ளன. பொங்கல் திருநாளில் மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விதவிதமான பொங்கலை வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.