நாவல் பழத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா.?

கோடை காலங்களில் மட்டும் கிடைக்கும் நாவல் பழம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமான மண்டலத்தை பாதுகாக்கிறது. எனவே மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகள் குறைகிறது. இந்த பழத்திற்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் திறனும் இருக்கிறது. இந்த பழத்தில் இருக்கும் அந்தோசயினின்கள் ஒரு ஆக்சிஜனேற்றியாகும். இது இன்சுலின் உற்பத்தித்திறனை ஊக்குவிக்கிறது. இதில் இருக்கும் ஆன்ட்டிஆக்ஸிடென்ட் நச்சுத்தன்மையை நீக்கி உடலை பாதுகாக்கிறது. எனவே நாவல் பழத்தை சாலை ஓரம் விற்பதை பார்த்தால் கண்டிப்பாக வாங்கி சாப்பிடுங்கள்.

தொடர்புடைய செய்தி