சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கா?

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாட தேர்வு எழுதுவது கட்டாயமில்லை என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல் முற்றிலும் வதந்தி என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. சிறுபான்மை மொழி மாணவர்கள் தமிழ் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பரவிய செய்தியை மறுத்துள்ள தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம், இது உண்மைக்கு புறம்பானது என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், தமிழ் பாடம் கட்டாயம் என்று அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி