ஒரு சில சரும பிரச்சனைகளுக்கு நீரழிவு நோய் காரணமாக இருக்கலாம். நீண்ட கால சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கால்களில் பொட்டு அளவிற்கு கருமை அல்லது பிரவுன் நிறத்தில் கருப்பு கருப்பாக இருக்கும். இதில் அரிப்பு, எரிச்சல் எதுவுமே இருக்காது. வெறும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக கால் முழுவதும் பரவி விடும். இதற்கு தனியாக மருந்து என்பது கிடையாது. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்தாலே இந்த கருமை மறைந்து விடும்.