30 அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக SP வேலுமணியை தேர்வு செய்து தற்காலிக சபாநாயகரிடம் கடிதத்தை கொடுத்துள்ளனர். முன்னதாக 17 எம்.எல்.ஏக்கள் இபிஎஸ் தலைவராக இருக்க வேண்டும் என கடிதம் அளித்திருந்தனர். இந்நிலையில், SP வேலுமணிக்கு ஆதரவளித்திருக்கும் 30 எம்.எல்.ஏக்களும் முதல்வர் விஜய்யின் தவெக அரசுக்கு ஆதரவளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 2 மணி நேரத்தில் செய்தியாளர்களை சந்திப்போம் என சி.வி.சண்முகம் கூறியுள்ள நிலையில், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி: நியூஸ் தமிழ்