அரவக்குறிச்சியா அல்லது காங்கேயமா? தொகுதி மாறும் அண்ணாமலை?

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. டெல்லி பாஜக தலைமை மூலமாக காங்கேயம் தொகுதியில் போட்டியிட அவர் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலை, பள்ளப்பட்டி நகராட்சியில் பெற்ற குறைந்த வாக்குகள் காரணமாக தோல்வி அடைந்தார். இதனால் தொகுதி மாற முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி