தமிழகம் முழுவதும் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார். சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் "பெல்ட் ஏரியாக்களில்" உள்ள புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர், மற்றும் மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் 57,084 பேருக்கு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.