அரசு கல்லூரிகளில் கூடுதலாக 10,023 மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல்

நாடு முழுவதும் மருத்துவர் பற்றாக்குறையை சமாளிக்க, அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 10,023 இடங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் இளநிலை படிப்புகளுக்கு 5,023 இடங்களும், முதுநிலை படிப்புகளுக்கு 5,000 இடங்களும் ஒதுக்கப்படும். இந்த புதிய திட்டத்தின் கீழ், 2025-2026 முதல் 2028-2029 ஆம் ஆண்டுக்குள் இந்த இடங்கள் அமல்படுத்தப்படும். மேலும், மருத்துவக் கல்வி, ஆசிரியர்கள் நியமனம், தகுதி வரையறை குறித்து தேசிய மருத்துவ ஆணையம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி