கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க விண்ணப்பங்கள் விநியோகம்

இலங்கையில் உள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா வரும் பிப்.27,28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்தியாவிலிருந்து கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான விண்ணப்ப விநியோகம் ஜன.15 முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் வேர்கோடு புனித சூசையப்பர் ஆலயத்தில் இந்த விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும், 5 முதல் 70 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி