கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: 2 லட்சம் பரிசு

கணினி தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சி துறை "கணினி தமிழ் விருது" வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இவ்விருது பெறுபவருக்கு ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. 2025-ம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் உரிய ஆவணங்களோடு தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாக அனுப்பலாம்.

தொடர்புடைய செய்தி