ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாம்சங் மற்றும் பிற நிறுவனங்களின் மடிக்கக்கூடிய போன்களுக்கு போட்டியாக, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உறுதியான திரையுடன் இந்த புதிய ஐபோன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆப்பிள் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகாத நிலையிலும், இதற்கான காப்புரிமை மற்றும் உற்பத்தி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
நன்றி:SunNews