அரசியலில் எதுவும் நடக்கலாம் - ஓபிஎஸ்

அரசியலில் எதுவும் நடக்கலாம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இன்று (ஜூலை 31) மாலை முதல்வரை சந்தித்தப் பின் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், "அரசியலில் நண்பர்களும் இல்லை. எதிரிகளும் இல்லை என்பதுதான் கடந்தகால வரலாறு. எதிர்காலத்தில் தேர்தல் நெருங்கும்போது எதுவும் நடக்கலாம். உடல் நலம் பற்றி விசாரிக்கவே இந்த சந்திப்பு நடைபெற்றது; அரசியல்நிமித்தமாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை" என பேட்டியளித்துள்ளார்.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி