மனிதர்களை போல எறும்புகள், தங்கள் உடலின் பக்கவாட்டிலுள்ள நுண் துளைகள் வழியே சுவாசிக்கின்றன. தங்கள் எடையை விட 20 முதல் 50 மடங்கு அதிக எடையை தூக்கும் பேராற்றல் கொண்ட இவை, உறங்குவதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆயிரக்கணக்கான எறும்புகள் ஒன்று சேர்ந்து ராணுவ கட்டுப்பாட்டுடன் தலைவியின் வழிகாட்டலில் ஒற்றுமையாக செயல்படும் வியத்தகு சமூக அமைப்பை கொண்டுள்ளன.