தமிழகத்தில் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

மின்சார வாரியத்தில் டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் உதிரிபாகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர். கடந்த ஜூன் 8-ம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாக, சென்னையில் பெருங்குடியில் 4 இடங்கள் மற்றும் அண்ணா நகரில் 3 இடங்கள் உட்பட முறைகேட்டில் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி

✕
✕