விசாரணை நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர்களின் நியமன நடைமுறைகள் சந்தேகத்தை எழுப்புவதாக கூறி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. தகுதி மற்றும் ஒளிவுமறைவற்ற நடைமுறைகளை பின்பற்றாமல் மேற்கொள்ளப்படும் நியமனங்கள் நீதி நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை பாதிக்கும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.