தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், விடைத்தாள் நகல் (ஸ்கேன் நகல்) பெற விரும்பும் மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் இன்று (மே 22) காலை 11 மணி முதல் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை (24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்டணம் ரூ.275 ஆகும்.