ஜெம் வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது

ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில், இன்று (நவ., 1) மேலும் ஒருவரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. வீரமணி தனது வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து வருவது தெரிந்தும், காவல் துறைக்கு தகவல் அளிக்காமல் மறைத்ததாக, அவரது வீட்டின் காவலாளி சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 12 சிறுமிகளின் புகார்களின் அடிப்படையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 5 பேருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕