சமீப காலமாக நிலநடுக்கம் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் 24 மணி நேரத்தில் இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை இந்து குஷ் பகுதியில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் 17 கி.மீ ஆழத்தில் உள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது. சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.