“மற்றுமொரு திமுக ஆட்சியாக”.. இபிஎஸ் விமர்சனம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும் அவர் வெளியிட்ட பதிவில், “பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது. சிறுமி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி