வெளிநாட்டு பயணிகளின் வருகையை எளிதாக்கும் வகையில், இந்தியாவில் தற்போது அமலில் உள்ள விசா நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, விசாவின் பிரதான பிரிவுகள் 13-லிருந்து 9 ஆகவும், உள்பிரிவுகள் 49-லிருந்து 23 ஆகவும் குறைக்கப்பட்டு, விண்ணப்ப படிவத்தில் நிரப்ப வேண்டிய விவரங்கள் 70% வரை குறைக்கப்படவுள்ளன. பயனாளர்களுக்கு ஏற்ற வகையில் 2019-ம் ஆண்டின் விசா வழிகாட்டுதல்கள் திருத்தப்படுவதன் மூலம் நாட்டின் சுற்றுலாத்துறை பெருமளவில் ஊக்கம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.