ஆந்திர பிரதேசத்தில் கூட்டணி அரசு ஒரு வருடம் நிறைவு பெற்றதை முன்னிட்டு, முதல்வர் சந்திரபாபு நாயுடு 'சூப்பர் சிக்ஸ்' திட்டத்தில் முக்கியமான பகுதியான ‘தல்லிகி வந்தனம்’ திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தத் திட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாயார் வங்கி கணக்குகளில் கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ.15,000 வழங்கப்படும். இதன் மூலம் 67 லட்சம் மாணவர்கள் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.