அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் 42,114 ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் இலவசமாக முழுமையான சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் சட்டப்பேரவையில் இன்று (செப்.8) அறிவித்துள்ளார். ஓட்டுநர்களின் உடல்நலனை பேணவும், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையுடன் இணைந்து இக்கட்டணமில்லாப் பரிசோதனைகள் நடத்தப்படம் என அவர் தெரிவித்துள்ளார்.